--- --:--:-- --

நிலத்திற்க்கு வேலி அமைப்பதில் ஏற்ப்பட்ட கைக்கலப்பு

4.1

கரூர் அருகே நிலம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 3 பேர் காயமடைந்தனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காமராஜன் கடனை திருப்பித் தராததால் அவரது நிலத்தில் 2017 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏலம் விட்டது.

 

அந்தப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ஏலத்தில் எடுத்தார். அந்த நிலத்துக்கு வேலி அமைக்க சதீஷ்குமார் தமது நண்பர்களுடன் சென்றபோது அடியாட்களுடன் அங்கு வந்த முன்னாள் எம்எல்ஏ காமராஜர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சதீஷ்குமார், காமராஜ் உட்பட 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏலம் விடப்பட்ட நிலத்திற்கு அருகேயுள்ள தமது மனைவியின் பெயரில் இருக்கும் நிலத்தையும் சேர்த்து சதீஷ்குமார் வேலி அமைக்க முயற்சித்த காரணத்தால் அவரை தடுத்து நிறுத்த முயற்சித்ததாக காமராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon