--- --:--:-- --

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் திறப்பு..!

5

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. இன்று முதல் 10 வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் நடைபெற உள்ளது.

 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இன்றும் நாளையும் மழையால் அரைநாள் மட்டுமே செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பை ஒட்டி பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது.

 

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான இன்று மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon