கோழியை காப்பாற்ற சென்ற பள்ளி மாணவன்..!
குன்றத்தூர் அருகே கோழியை காப்பாற்ற சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். குன்றத்தூர் அடுத்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கோபால் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மகன் சந்தோஷ்குமார் கிணற்றின் மீது நின்று கொண்டிருந்த கோழி கிணற்றுக்குள் விழாமல் இருப்பதற்காக அதனை துரத்தி சென்ற பொழுது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை சந்தோஷ்குமார் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாணவர் உயிரிழப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





