பள்ளி வாகனம் விபத்து..மாணவன் பலி..!
கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் பெண்ணும், மாணவன் அர்னீஷும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 2 மாணவர்கள் படுகாயங்களுடன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென பிரேக் அடித்ததால் விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தப்பியோடிய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.





