பள்ளிச் சீருடை – அண்ணாமலை வலியுறுத்தல்
பள்ளி மாணவர்களுக்கான சீருடை காலணி உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் பள்ளிகளில் திறந்து ஒரு மாதம் கடந்த பிறகும் மாணவர்களுக்கு புத்தகப்பை காலணிகள் வழங்கப்படவில்லை என நாளேடுகளில் செய்தி வெளியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரு சீருடை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் அதை நாள்தோறும் அணிய முடியாத நிலைக்கு மாணவர்கள் ஆளாகியுள்ளதாகவும் சில பள்ளிகளில் கொடுக்கப்பட்டுள்ள காலனிகள் மாணவர்களுக்கு பொருந்துவதில்லை என்றும் புகார் அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்க திமுக அரசுக்கு மனம் வரவில்லை எனவும் அண்ணாமலை சாடியுள்ளார்.






