--- --:--:-- --

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்..!

6

தென்காசி மாவட்டத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றும் மன்மதராஜிடம் அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் தொலைபேசி வாயிலாக கல்லூரி பாடத்தில் சந்தேகம் கேட்டுள்ளார்.

 

இதையடுத்து மாணவியை குற்றாலத்தில் உள்ள பூங்காவிற்கு வரவழைத்த மன்மத ராஜ் அங்கு வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மாணவி கூச்சலிட்டதை தொடர்ந்து வந்திருந்த பொதுமக்கள் மன்மதராஜை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

விசாரணையில் மன்மத ராஜ் ம மாணவிக்கு பாலியல் தொல்லை அளிப்பது ஒப்புக்கொண்டதாக அவரை கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon