வேலை இழந்தோருக்கு வாரம் 22 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்..!
கொரொனா காலத்தில் வேலை இழந்தோருக்கு வாரம் 22 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பெருந்தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 26 ஆயிரத்து 772 ஆக உள்ளது.
அங்கு பெருந்தொற்றால் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் பெருந்தொற்று கால பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் 73.70 லட்சம் கோடி மதிப்பிலான மீட்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன.
இதன்படி பெருந்தொற்று காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு வாரத்துக்கு 22 ஆயிரத்து 110 ரூபாய் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.







