பட்டப்பகலில் ஆசிரியரை ஓட ஓட வெட்டிய பள்ளி மாணவர்கள்..!
சிவகாசி அருகே பள்ளி ஆசிரியரை அரிவாளால் தாக்கிய பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கள் அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியரை 2 பள்ளி மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் தாக்குதல் நடத்திய மாணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து மூவரையும் இளம் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்ப்படுத்தி சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.






