ரூ.5 லட்சத்துக்கு மண்ணுளிப் பாம்பு விற்பனை..!
சேலம் அருகே மன்னுளிப்பாம்பை 5 லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவத்தில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஓமலூர் அடுத்த தாரமங்கலம் அருகே கும்பல் ஒன்று மண்ணுளிப் பாம்பை விற்பனை செய்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் பெரிய போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்ட பொழுது அங்கு வந்த காரை போலீசார் தடுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது சுமார் 2 அடி நீளம் மூலம் மண்ணுளிப் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக காரில் இருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அதில் கைதானவர்கள் நவநீதகிருஷ்ணன், நல்லன் ராஜ், துவாரகேஸ்வரன் என தெரியவந்தது. இதில் தப்பியோடிய அசோக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நவநீதகிருஷ்ணனும் அஸ்வகுமாரும் சேர்ந்து மண்ணுளிப் பாம்பை, ஐந்து லட்ச ரூபாய் கேட்டது விசாரணை அம்பலமானது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






