நடத்துனரின் பணப்பை பறிப்பு.. நடத்துனர் மீது தாக்குதல்..!
பயண சீட்டு பெறுவது தொடர்பான தகராறில் காவலர் உதவியுடன் அரசு பேருந்து நடத்துனரை தாக்கி பணப்பையை பறித்த நபரையும் காவலரையும் பிடித்து சக ஓட்டுனர்களும் நடத்தினர்களும் போலீசில் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலைக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் ஏறிய திருவண்ணாமலை நாரைனூர் கிராமத்தை சேர்ந்த நடத்துனரிடம் 200 ரூபாய் கொடுத்துவிட்டு 500 ரூபாய் கொடுத்ததாக கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பாண்டியன் காவலராக பணியாற்றும் தனது நண்பர் திருமானிடம் செல்போனில் அழைத்து தகராறு குறித்து விளக்கி பேருந்து திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்குள் வந்ததும் திருமால் உதவியுடன் பாண்டியன் நடத்துனரின் பணப்பையை பிடுங்கி சரமாரியாக தாக்க முயன்றுள்ளார்.
சக ஓட்டுனர்களும் நடத்துனர்களும் இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி அனைத்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகளை இயக்காமல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இருவரையும் கிழக்கு காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.






