ஓடும் பேருந்தில் ஏற முயன்று கீழே விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவர்..!
ஓடும் பேருந்தில் ஏற முயன்று தடுமாறி கீழே விழுந்து பள்ளி மாணவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். கும்பகோணம் செல்லும் நகரப் பேருந்து சென்றது. நிறுத்தத்தில் இருந்து பேருந்து கிளம்பியபோது முகமது ஆசிக் என்ற பதினோராம் வகுப்பு மாணவர் ஓடி வந்து மூன்றாவது படிக்கட்டு வழியாக ஏற முயன்று உள்ளார்.
அப்பொழுது கால் இடறி கீழே விழுந்த மாணவரின் உடல் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அதே பேருந்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.






