தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!
தமிழகம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
நடுநிலை பள்ளிகளின் நிர்வாக குழு அமைக்கப்பட இருப்பதால் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை என்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் எனவும் தொடர் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





