தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
தொடர் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதேபோல செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் ஏற்கனவே நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் மழை தொடர்வதால் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.







