--- --:--:-- --

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரிய திமுக மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!!

t

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி திமுக தரப்பிலும், மேலும் 6 பேர் தரப்பிலும் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 2 வாரங்களுக்குப் பிறகே வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. இதனால் தேர்தலுக்கான ஏற்பாடுகளிலும் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பும் நாளை மறுதினம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே புதிய மாவட்டங்கள் பிரிக்கப் பட்டுள்ளதால், தொகுதி மறுவரை பட்டியலை வெளியிட வேண்டும். இட ஒதுக்கீடு பட்டியல் ம்ற்றும் சுழற்சி முறையில் தொகுதிகள் ஒதுக்கீடு போன்றவற்றையும் வெளியிடாமல் தேர்தலை அறிவிக்கக் கூடாது என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில்இதே பிரச்னைகளை முன்வைத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போன்று மேலும் 6 பேர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து, அவசர வழக்காக விசாரிக்கவும் முறையிட்டிருந்தனர். இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

 

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. வழக்கு விசாரணைக்காக , 2 வாரங்களுக்குப் பிறகே பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2 வாரங்களுக்குப் பிறகே வழக்கு விசாரணை நடைபெறும் என்பதால் உள்ளாட்சித் தேர்தலுக்கு தற்போதைக்கு தடையேதும் விதிக்கப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon