--- --:--:-- --

200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் ஏற்க மறுப்பு தெரிவித்த சமந்தா..!

8

மந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் விவாகரத்து ஏற்பட்டதால் அவருடைய குடும்பத்தில் இருந்து 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் ஏற்க நடிகை சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் கடந்த 2017 இல் திருமணம் செய்து கொண்டனர்.

 

அதன்பின் இருவரும் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனிடையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சமந்தா திருமணத்திற்குப் பிறகு ஒரு படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

 

அது கணவருக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்து இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் விவாகரத்து முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இருவரும் பிரிவோம் என்று முடிவெடுத்ததையடுத்து நாகசைதன்யா குடும்பத்திலிருந்து சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தருவதாக கூறியுள்ளனர்.

 

ஆனால் சமந்தா இதை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. நான் எனது சொந்த காலில் நிற்கக் கூடியவள். யாருடைய பணமும் தனக்கு வேண்டாம் என சம்மந்தா தெரிவித்திருக்கிறாராம்.

Right Menu Icon