பள்ளிக்கூடம் தொடங்கிய நடிகை சமந்தா
பிரபல நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார். சென்னையை சேர்ந்த நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
நடிப்பை தாண்டி சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வரும் சமந்தா சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹீல்ஸ் பகுதியில் அந்த பள்ளி இயங்கி வருகிறது. கல்வியில் இருக்கும் ஆர்வத்தால் பள்ளியை தொடங்கியுள்ளதாக சமந்தா தெரிவித்துள்ளார்.






