ஆட்டோவில் ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்ட சயிப்..!
வீட்டுக்குள் புகுந்த மர்மநபரை மடக்க முயற்சித்த நடிகர் சயிப் அலி கானை, அந்நபர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் விழுந்த சயிப்பை, ஹாஸ்பிடலுக்கு கூட்டிப் போக கார் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் வேறு வழியின்றி, சயிப்பின் மூத்த மகன் இப்ராஹிம், ஒரு ஆட்டோ பிடித்து தந்தையை, 2 கிமீ தொலைவில் உள்ள லீலாவதி ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளார்.






