மும்பை அணியில் சச்சின் மகனுக்கு வாய்ப்பு..!
கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் இடது கை வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி தொடர்பான மும்பை அணியில் இடம்பெற்றார்.
அதன் தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் மும்பை அணி 20 லட்சத்துக்கு அர்ஜுன் டெண்டுல்கர் ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் ஜனவரி 13 தொடங்கும் ரஞ்சித் கோப்பை தொடருக்கான மும்பை அணி இன்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து பிரித்வி ஷா தலைமையிலான இந்த அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார்.
இந்த அறிவிப்பை பலர் வரவேற்றாலும் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதால் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.





