சபரிமலை தங்கத் திருட்டு… நடிகர் ஜெயராமிடம் விசாரணை ஏன்?
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலின் கருவறைக்கு முன்பு 2 துவாரபாலகர் சிலைகள் அமைந்துள்ளன. இந்த துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பின்னர் தங்க முலாம் பூசி தங்கக் கவசங்கள் மீண்டும் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவற்றின் எடை குறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அந்த சிலைகளில் இருந்த தங்க பீடங்கள் திருடப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டு கேரள உயர்நீதிமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் அரசு மீதும், தேவசம் போர்டு மீதும் குற்றம்சாட்டின.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தங்க பீடங்களை கண்டுபிடிக்கும்படி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில், தங்க கவசங்களை புதுப்பிக்கும் செலவை ஏற்றுக் கொண்ட பெங்களூர் தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவரை முதலில் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் சபரிமலை கோயில் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் திருவாபரணம் கமிஷனர் பைஜு, முன்னாள் நிர்வாக அதிகாரி சுதீஷ்குமார், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்களான வாசு, பத்மகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தங்கத் தகடுகளை பராமரிப்புக்காக சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி, அதிலிருந்து தங்கத்தை பிரித்து எடுத்து உருக்கி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்த தகடுகளில் மீண்டும் சிறிது தங்க முலாம் பூசி அதை பல்வேறு செல்வந்தர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று பூஜை நடத்தி பணமும் வசூலித்துள்ளார்.
இதற்கிடையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் பிரபல நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு தீர்மானித்திருப்பதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை வைத்து சென்னையில் நடைபெற்ற ஒரு பூஜையில் அவர் கலந்து கொண்டதே இந்தக் குற்றச்சாட்டுக்கு காரணமாக அமைந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ஜெயராம், “கடந்த 50 ஆண்டுகளாக நான் சபரிமலை கோவிலுக்கு சென்று வருகிறேன். கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை காட்சிப்படுத்திய பூஜையில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில்தான் அந்த பூஜையில் பங்கேற்றேன். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அது தற்போது இப்படி ஒரு பிரச்சினையை தரும் என நான் எதிர்பார்க்கவில்லை. உண்மை வெளிவரட்டும். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்புப் புலனாய்வுக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜெயராமிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாக வெளியான தகவலால






