--- --:--:-- --

மசூதி மீது ரஷ்யா குண்டு வீசி தாக்குதல்..!

2

80க்கும் மேற்பட்டோர் அடைக்கலம் புகுந்த மசூதி மீது ரஷ்யா குண்டு வீசி தாக்கியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உள்ள முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இந்நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பாதுகாப்பிற்காக பதுங்கியிருந்த சுல்தான் சுலைமான் மசூதி மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தூதரகம் 34 குழந்தைகள் உட்பட உக்ரைனை சேர்ந்த 86 பேர் அந்த பகுதியில் தஞ்சம் அடைந்ததாகவும் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

 

Right Menu Icon