--- --:--:-- --

சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் கொள்ளை- ஊழியர்களே திருடியது அம்பலம்

12

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் பணம் கொள்ளை போன வழக்கில் திடீர் திருப்பமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் இருவரே பணத்தை பதுக்கி வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது.

 

கடந்த 26ஆம் தேதி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக நடந்த தகராறின் பொது சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது 18 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

விசாரணையில் சிக்கிக் கொள்வோம் என பயந்த பரமசிவம், செந்தில் சேர்ந்த இருவர் தாமாகவே முன்வந்து பணத்தை கொள்ளை அடித்ததாக உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் 10 ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon