அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி..!
கொரொனா சோதனையை அதிகப்படுத்தி உயிரிழப்பை கட்டுப்படுத்த வேண்டுமென தமிழக அரசை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை தலைமை செயலாளர் இறையன்புவிடம் ஜெயக்குமார் நேரில் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.



