விபத்தில் சிக்கிய ஐபிஎல் தொடரின் முதல் பழங்குடியினர் வீரர் ராபின் மின்ஸ்..!
ஐபிஎல் தொடரின் முதல் பழங்குடியின வீரர் ராபின் மின்ஸ் விபத்தில் சிக்கி உள்ளார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ராபின் மின்சை குஜராத் அணி 3 கோடியே 60 லட்சம் எடுத்தது.
இதன் மூலம் அவர் ஐபிஎல் தொடரில் இடம் பெறும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றார் வாகன விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் அவருக்கு வலது முழங்காலில் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அவர் நன்றாக இருப்பதாக அவரது தந்தை கூறியுள்ளார்.
விபத்தில் இரு சக்கர வாகனம் சிறிய அளவில் சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.





