தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு..!
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராகவும், நாகாலாந்து ஆளுநர் ஆர்என் ரவி தமிழக ஆளுநராக மாற்றப்பட்டனர். நேற்று முன்தினம் சென்னை வந்த அவரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்பளித்தார்.
இந்த நிலையில் இந்திய ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி புதிய ஆளுநரை பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். கொரொனா கட்டுப்பாடுகளால் மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு கேரள பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கினார். மத்திய அரசு உளவு பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி 2012 இல் ஓய்வு பெற்றார். 2019ஆம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராக நியமிக்கப்படும் வரையில் நாகலாந்து ஆளுநராக பதவி வகித்துள்ளார்.






