--- --:--:-- --

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

8

மிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, மதுரை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon