5 வயது குழந்தையை தாக்கி கொலை செய்த அக்கா..!
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் ஐந்து வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் குழந்தையின் அக்கா கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் சேர்ந்த மேரி என்பவர் தனது 2 குழந்தைகளை அக்கா மகளான மேரி இடம் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார். ஐந்து வயதான குழந்தை மயங்கி விழுந்ததாக மேரி தகவல் அளிக்க மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் உடலில் தீக்காயம், நகக்கீறல் காயங்கள் இருந்ததால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பினார். அப்பொழுது தலையில் ரத்தம் உறைவதால் குழந்தை உயிரிழந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.
இதனால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் குழந்தையின் அக்கா முறையான 20 வயதான மேரியை விசாரணை செய்த பொழுது குழந்தை சேட்டை செய்ததால் தாக்கியதாக அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.






