மழையால் நோய்கள் பரவும் அபாயம்..!
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாற உள்ளதால் போலீசார் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் புயல் காரணமாக ஏற்படும் தொடர் மழையினால் நோய்கள் வேகமாக பரவும் என்றும் அரசு மிக மிக கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதியவர்கள் நீரிழிவு நோய், நுரையீரல், கல்லீரல் நோய் தொற்று உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்கனவே அதிகமாக உள்ள சூழலில் அரசு தொடர்ந்து விழிப்புணர்வோடு இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புயல் கடந்து வரும் பாதைக்கு அருகே இருக்கும் மருத்துவமனைகளில் நோயாளிகளை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




