திருவாடானை தியாகிகள் பூங்காவை பராமரிப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் தமிழக அரசால் ரூபாய் 7.5 லட்சம் செலவில் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தியாகிகள் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்கா கட்டப்பட்டு பணிகள் முழுமை பெறாமல் உள்ளது.
மேலும் மின் இணைப்பு வழங்கப்படாமலும், பூங்காவிற்கு உள்ளே இளைப்பாற இருக்கைகள் இல்லாமலும் மேலும் சில வசதிகள் செய்யப்படாமலேயே முழுமை பெறாமல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அன்று முதல் தற்பொழுது வரை பூங்கா திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால் பூங்காவின் உள்ளே புதர்மண்டி பயன்பாடற்ற நிலையில் தியாகிகள் பூங்கா உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தியாகிகள் பூங்காவை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை வைத்தார்கள்.





