வெங்கல் ராவ்க்கு சிறுநீரக கோளாறு சிகிச்சை..!
இரவு கோளாறால் அவதிப்பட்டு வந்த பிரபல நகைச்சுவை நடிகை வெங்கல்ராவ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். வெங்கல்ராவ் பற்றியும் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு குறித்தும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
வடிவேலு காமெடியை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கும் ரசிகர்களுக்கு நிச்சயப்பட்ட முகம்தான் வெங்கல்ராவ். ஆந்திராவை சேர்ந்த இவர் சினிமாவில் ஸ்டன்ட் கலைஞர் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
பல நடிகர்களுக்கு டூப் போட்டார். பின்பு சண்டைக்காட்சிகளில் காயம் ஏற்பட சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். செந்திலுடன் இவர் நடித்த காட்சி மறக்க முடியாதது. சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட வெங்கல்ராவ் விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
இந்த செய்தி ரசிகர்களை சோர்வடைய செய்தது. தற்போது அவர் இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறிய அவர் வீடு திரும்பினார். இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.






