தலைமுடியால் காரை இழுத்துச் சென்று அரசுப்பள்ளி மாணவி சாதனை..!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட காரை தலைமுடியை இழுத்து சென்று அரசுப் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஏற்கனவே 990 கிலோ எடை கொண்ட காரை தலைமுடியால் இழுத்து சாதித்தவர் தற்பொழுது மேலும் அதிக எடை கொண்ட காரை தலை முடியில் கட்டி ஒரு நிமிடம் 10 நொடிகளில் 110 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்று புதிய சாதனை படைத்துள்ளார். இவரை பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.






