--- --:--:-- --

மாணவியிடம் அத்து மீறியதால் பள்ளி ஆசிரியர் மீது உறவினர்கள் தாக்குதல்..!

7

ந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் மாணவியிடம் அத்து மீறியதால் பள்ளி ஆசிரியர் மீது மாணவியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

 

இந்த பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக ஆசிரியர் ஒருவர் துன்புறுத்துவதாக உறவினர்களுடன் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரை வகுப்பறையில் இருந்து வெளியே வர கூறி அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

 

இதுகுறித்து ஆசிரியர் தான் எதையும் செய்யவில்லை எனவும் சரியாக படிக்காததால் கண்டித்ததாகவும் இதனை தவறுதலாக புரிந்து கொண்டு தன்னை தாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் இருதரப்பினரையும் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon