ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானாவில் ரெட் அலர்ட்..!
பெருமழையால் தெலுங்கானாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு எட்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆந்திரா, ஒடிசாவில் மூன்று மாவட்டங்களுக்கு மீண்டும் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் கன மழையால் டெல்லி, உத்திரபிரதேசம், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள் வெள்ளக்கடாக மாறியது. தற்பொழுது ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
தெலுங்கானா மாநில வரலாற்றில் ஒரே நாளில் அதிகபட்சமாக லட்சுமி தேவி பேட்டையில் 65 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நகர் பகுதியில் பிரதான பகுதிகள் என பல இடங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன.
இதனால் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நியமித்து சீரமைப்பு பணிகளை மாநில அரசு முடிக்கி விட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவும் விரைந்துள்ளது. இதனிடையே தெற்கு ஓடிசா, ஆந்திராவில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை முதல் அதீத கன மழை வரை பெய்யக்கூடும் என ஹைதராபாத் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நிர்மல், நிஜாமாபாத், கரீம் நகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களிலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





