--- --:--:-- --

யூனியன் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி..!

9

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத காரணத்தால் யூனியன்பேங்க் ஆப் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

வங்கிகளின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கைகள் அளித்த தொடர்பில் ரிசர்வ் வங்கி பல்வேறு வழிகாட்டுதல்களை வர்த்தக வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்த வழிகாட்டுதல்களை யூனியன் பாங்க் ஆப் இந்தியா பின்பற்றவில்லை.

 

வெள்ளை, சிவப்பு கொடி கணக்குகள் முறையாக வகைப்படுத்தாதது, பாதுகாப்பு ரசீதுகள் தொடர்பான அறிக்கைகளை வெளிப்படுத்த தவறியது என ரிசர்வ் வங்கி குற்றம்சாட்டியுள்ளது.இது ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது.

 

இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனையடுத்து யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாயை அபராதமாக விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Right Menu Icon