--- --:--:-- --

ரேஷன் கடையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

5

ரேஷன் கடையில் உணவுப்பொருள் வழங்குவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களின் விரல் ரேகை தேய்மானம் அல்லது விற்பனை இயந்திரத்தின் இணைய இணைப்பில் தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணத்தால் பொருட்கள் வழங்குதலை நிறுத்தக் கூடாது என்றும் அன்புடன் வரவேற்று ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

 

முதற்கட்டமாக தடையின்றி பொருள் வழங்க வேண்டும் என கூறியுள்ளது. கடைக்கு வர முடியாத மூத்த மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம் பெற விரும்பினால் உடனடியாக இந்த வழிமுறை மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்படும்.

Right Menu Icon