ரத்தன் டாட்டா மருத்துவமனையில் அனுமதி..!
டாட்டா சன்ஸ் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம் குறைவு காரணமாக ரத்தன் டாடா மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரத்தன் டாடாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் இருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் ரத்தன் டாட்டா விளக்கம் அளித்துள்ளார்.





