தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும்..!
தமிழ்நாட்டில் மே 3ஆம் தேதி அதாவது நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை ஹாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஷவ்வால் பிறை தென்படாததால் ரம்ஜான் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அரபு நாட்டின் பிறை பார்க்கும் குழு பிறையைப் பார்த்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்னரே ரமலான் மாதத்தின் தொடக்கம் மற்றும் முடிவில் சரியான தேதி அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் அரபு நாடுகளில் கடந்த மாதம் இரண்டாம் தேதி நோன்பு தொடங்கியது.





