--- --:--:-- --

ராஜேந்திர பாலாஜி வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவு!

download (6)

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஆவணங்களை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருக்கிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியை பயன்படுத்தி 2011-ம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

புகாரில் முகாந்திரரம் இயலாததால் விசாரணை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்திருந்தது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் 1996 ஆம் ஆண்டு திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்த முதல், தற்போது வரை ராஜேந்திர பாலாஜியின் வருமானம் சொத்து விவரங்களை விசாரித்து உத்தரவிட்டு இருந்தனர்.

 

அதனை எடுத்து லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு பொது துறை செயலர் சார்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேசமயம் நடவடிக்கை கைவிடப்பட்ட தற்கான காரணம் குறிப்பிடாததால் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய தமிழ்நாடு பொது துறை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அதன்படி பொதுத்துறை செயலர் தரப்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கில் செப்டம்பர் மாதம் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon