சென்னையில் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் – உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் கடந்த மாத மழை அனுபவத்தின் அடிப்படையில் நிவாரண மையங்கள் உள்ளிட்டவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.





