போக்குவரத்து ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்த ராகுல்..!
டெல்லியில் அரசு பேருந்து ஊழியர்கள் நிரந்தரமற்ற பணி போதிய உயர்வு இல்லாததால் இரண்டு வாழ்க்கைக்கு தள்ளப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் அரசு பேருந்தில் பயணித்து ஓட்டுநர் நடத்துனர்களின் குறைகளை கேட்டிருந்த வீடியோவை பகிர்ந்த ராகுல் காந்தி இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஓட்டுநர்களின் அன்றாட வாழ்வில் பிரச்சனைகளை தான் கேட்டிருந்ததாக கூறியுள்ளார்.
மேலும் பயணிகள் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட ஊர்காவல் படையினருக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது. உங்களிடம் விவகாரங்கள் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
நாள்தோறும் மில்லியன் கணக்கான பயனர்களின் பயணத்தை எளிதாக்கும் ஓட்டுநர்கள் நடத்துனர்களின் அர்ப்பணிப்பது ஈடாக அவர்களுக்கு அநீதி கிடைத்திருப்பதாகவும் ராகுல் வேதனை தெரிவித்துள்ளார். சம வேலை, சம ஊதியம் உள்ளிட்ட டெல்லி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ராகுல் காந்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.






