ராகுல்காந்தி இன்று கூடலூர் வருகை..!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒரு நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டின் கூடலூருக்கு வருகை தருகிறார். அங்குள்ள புனித தாமஸ் பள்ளியின் பொன் விழாவில் அவர் பங்கேற்கிறார்.
பள்ளி விழாவிற்குப் பிறகு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






