எடப்பாடி பழனிசாமியிடம் ஆசி பெற்றதற்கு விளக்கம் அளித்துள்ள ரவீந்த்ரநாத்..!
அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த கட்சியுடன் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இடத்திற்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். அப்பொழுது முதலமைச்சரிடம் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஆசி பெற்றார்.
அதை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை ஓ பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் நன்றி தெரிவித்தார். இதேபோல் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ள 9 உறுப்பினர்களும் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு தொடர்ந்து நடைபெற்றது. பேட்டியளித்த ரவீந்திரநாத் முதலமைச்சரிடம் ஆசி பெற்றது குறித்து விளக்கம் அளித்தார். மூத்த முன்னோடி என்பதன் வகையில் அவரிடம் ஆசி பெற்றதாக அவர் விளக்கமளித்துள்ளார்.







