--- --:--:-- --

புதுச்சேரிக்கும் தமிழகத்துடன் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வலியுறுத்தல்..!

6

புதுச்சேரிக்கும் தமிழகத்துடன் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்துகின்றன.

 

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் செயலாளர் தலைமையிலான குழுவினர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

 

அப்போது தனி மாநில அந்தஸ்து கோரி காங்கிரஸ் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரத்து செய்ய வேண்டுமென திமுகவும், டெல்லி காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பாஜக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

எனினும் தமிழகத்துடன் சேர்த்து ஒரே கட்டமாக புதுச்சேரிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கேட்டுக் கொண்டனர். அதை தொடர்ந்து புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon