--- --:--:-- --

தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக் கூட்டம் – திமுக அறிவிப்பு

1

த்திய அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் 12-ஆம் தேதி திமுக கண்டனப் பொதுக் கூட்டம் நடத்துகிறது. தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து, வரும் 12-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

 

புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை, இந்தி திணிப்பு, மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு போன்றவற்றை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து “தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்” என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் மார்ச் 12-ஆம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூரில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகனும், விருத்தாசலத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, சி.வி.கணேசனும் கலந்து கொள்ள உள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், தமிழ்நாட்டை இரண்டாம் தர மக்களாக நினைக்கும் மோடி அரசின் சதியை அம்பலப்படுத்துவோம் என்றும் திமுக தலைமை அறிவித்துள்ளது.

Right Menu Icon