--- --:--:-- --

வயதானவர்களின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லும் சைக்கோ கொலைகாரன்

8

சேலத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் காசகரனூரில் கடைக்கு அருகில் முதியவர் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.அப்பொழுது அந்தக் கடைக்கு அருகில் வந்த சைக்கோ கொலைகாரன் ஒருவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்த முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு பின் அவரிடம் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.

 

இந்த கொலை, கொள்ளை பற்றிய சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.அதே சம்பவம் போல் இன்று அதிகாலை சேலம் பழைய பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள கடையொன்றின் பக்கத்தில் அங்கப்பன் என்ற முதியவர் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்.

 

அங்கேயும் அந்த கடைக்கு அருகில் சென்ற அதே சைக்கோ அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அவர்களிடம் இருந்த பணத்தையும் கொள்ளை அடித்துள்ளான்.இந்த சம்பவம் பற்றியும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது இரண்டு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில் ஒரே நபர் இருப்பது தெரியவந்துள்ளது.

 

மேலும் அந்த சைக்கோ கொலைகாரன் ஒரே உடையில் இரண்டு கொலைகளும் செய்துள்ளதால் அவன் மனம் நலம் பாதிக்கப்பட்டுள்ள தான் என்பதும் தெரியவந்துள்ளது,அந்த சைக்கோ கொலைகாரன் சம்பவம் நடந்த இடத்தின் அருகில் தான் சுத்திக்கொண்டு இருப்பான் .எனவே அவனைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே 100க்கு அலைக்கும்படி காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon