தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமமுக சார்பில் போராட்டம்..!
மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு அண்மையில் உயர்த்திய மின்கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து அண்ணாசாலை முன்பு அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் அமமுக சார்பில் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பது குறித்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஈரோட்டில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என பாமகவினர் முழக்கங்களை எழுப்பினர்.






