--- --:--:-- --

ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..!

13

ப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். நாடு முழுவதும் கொரொனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது.

 

எனவே அதன் பாதிப்பு இரண்டு லட்சத்தை கடந்து இருக்கக் கூடிய சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்றைய தினம் மத்திய கல்வி துறை அமைச்சகத்தின் சார்பில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

தற்போது முதுநிலை மாணவர்களுக்கான மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு என்பது ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon