--- --:--:-- --

மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதி..!

4

ருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓடியதால் இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.

 

மாதேஸ்வரன் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்று கைது செய்த போலீசார் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

கைதானவருக்கு தலைமை காவலரான தாமோதரனும், ராமமூர்த்தியும் காவல் இருந்துள்ளனர் .எனினும் மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓடியதால் காதலர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Right Menu Icon