--- --:--:-- --

கொரோனா அதிகரிப்பு காரணமாக பிரதமர் திடீர் ஆலோசனை..!

1

ந்தியாவில் மீண்டும் கொரொனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டில் சில மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

இந்தியாவில் நேற்று 2527 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முப்பத்தி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

கொரொனா பரவலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பல மாநிலங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவல் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடி வரும் 27ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Right Menu Icon