பிரதமரின் அடுத்த வெளிநாட்டு பயணம்
பிரதமர் மோடி புரூனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப். 3 4 – புரூனேவுக்கும், 4-5ல் சிங்கப்பூருக்கும் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புரூனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் ரஷ்யா, உக்ரைன், போலந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.





