ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடியின் சகோதரர் தரிசனம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு நல்ல புத்தி வர வேண்டுமென ஆண்டவனை பிரார்த்திப்பதாக பிரதமர் மோடியின் சகோதரர் தெரிவித்துள்ளார். தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடியின் சகோதரரான பிரகலாத் மோடி ராமநாத சுவாமியை தரிசனம் செய்தார்.
அதன் பிறகு பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டம் அனைவருக்கும் நன்மை பயக்கக் கூடியது என்றும், அதனை புரிந்து கொள்ளாமல் சிலர் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.






